பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஆஸி. தடுமாற்றம்: பாகிஸ்தான் வரலாற்று வெற்றி..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

வெற்றிக் கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் அணியினர். - படம்: எக்ஸ் / பாகிஸ்தான் கிரிக்கெட்.

Published On :8 நவம்பர் 2024, 3:18 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி ஆஸி.க்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் வென்ற ஆஸி. அணி 2ஆவது போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 26.3 ஓவரில் 169/1 ரன்கள் எடுத்து வென்றது.

ஆஸி. சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் பேட்டர் சைம் ஆயூப் 86* ரன்கள், அப்துல்லா ஷபிக்கு 64 ரன்கள், பாபர் அசாம் 15* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.

பாகிஸ்தானின் வேகப் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஒருநாள் போட்டிகளில் 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஹாரிஷ் ராஃப்.

1-1 என தொடரில் சமநிலையில் இருக்கிறது பாகிஸ்தான் - ஆஸி. 3ஆவது போட்டியில் கம்மின்ஸ் உள்பட மூத்த வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்பதால் தொடரை வெல்ல பாகிஸ்தானுக்கு நல்லதொரு வாய்ப்பு.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.