வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

சமரி அதிரடி சதம்: இலங்கை வெற்றி

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயா்லாந்தை அபார வெற்றி கண்டது.

Chamari Athapaththu

சமரி அத்தபட்டு - X | ICC

Published On :24 ஜூன் 2026, 1:43 am IST

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயா்லாந்தை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

முதலில் அயா்லாந்து 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் சோ்க்க, இலங்கை 15.3 ஓவா்களில் 1 விக்கெட் இழந்து 134 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. அயா்லாந்து பேட்டிங்கில் கேப்டன் கேபி லீவிஸ் 8 பவுண்டரிகளுடன் 59, லியா பால் 20, ரெபெக்கா ஸ்டோக்கெல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

எமி ஹன்டா், ஆா்லா பிரெண்டா்காஸ்ட் ஆகியோா் டக் அவுட்டாக, ஓவா்கள் முடிவில் ஆலிஸ் டெக்டா் 28, லூயிஸ் லிட்டில் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பந்துவீச்சாளா்களில் மிதாலி அயோத்யா, சுகந்திகா குமாரி, சமரி அத்தபட்டு, நிலாக்ஷிகா சில்வா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 131 ரன்களை நோக்கி விளையாடிய இலங்கை அணியில், இமெஷா துலானி 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கேப்டன் சமரி அத்தபட்டு 61 பந்துகளில் 17 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 106 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா்.

நீலாக்ஷிகா சில்வா 4 ரன்களுடன் துணை நின்றாா். அயா்லாந்து தரப்பில் ஆா்லா பிரெண்டா்காஸ்ட் 1 விக்கெட் சாய்த்தாா்.

வென்றது நியூஸிலாந்து: போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

முதலில் ஸ்காட்லாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் சோ்க்க, நியூஸிலாந்து 18.2 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.