திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

முதல் டி20: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image

பந்தை சிக்ஸருக்கு விளாசும் இலங்கை கேப்டன் சரித் அசலங்கா - படம் | AP

Updated On :9 நவம்பர் 2024, 10:28 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டம்புல்லாவில் இன்று (நவம்பர் 9) நடைபெற்றது.

135 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. அந்த அணி இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் ஸகாரி ஃபோல்க்ஸ் தலா 27 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, வில் யங் 19 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 16 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நுவான் துஷாரா, வனிந்து ஹசரங்கா மற்றும் மதீஷா பதிரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்‌ஷனா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இலங்கை வெற்றி

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. குசல் மெண்டிஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின், பதும் நிசங்கா மற்றும் குசல் பெரேரா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது அதிரடியாக ரன்கள் சேர்த்தது. இருப்பினும், பதும் நிசங்கா 19 ரன்களிலும், குசல் பெரேரா 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, கமிந்து மெண்டிஸ் 23 ரன்களுக்கும், பனுகா ராஜபக்சே 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

இந்த நிலையில், கேப்டன் சரித் அசலங்கா மற்றும் வனிந்து ஹசரங்கா பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்குத் தேவையான ரன்களைக் குறைத்தனர். வனிந்து ஹசரங்கா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கேப்டன் சரித் அசலங்கா 35 ரன்களுடனும், துனித் வெல்லாலகே 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் ஸகாரி ஃபோல்க்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் சாண்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.