சென்னையை விட்டுப் பிரிய மனமில்லை.! தீபக் சாஹரின் மனைவி உருக்கம்!

சிஎஸ்கே குறித்து தீபக் சாஹரின் மனைவி உருக்கம்!
சென்னையை விட்டுப் பிரிய மனமில்லை.! தீபக் சாஹரின் மனைவி உருக்கம்!
படம் | ஜெயா சாஹர் இன்ஸ்டா பதிவு
Published on
Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியில் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் நட்சத்திர வீரராக ஜொலித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தோனியுடன் தீபக் சாஹர் - ஜெயா சாஹர் இணை
தோனியுடன் தீபக் சாஹர் - ஜெயா சாஹர் இணை

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின்போது நிகழ்ந்த மறக்க முடியாத தருணங்கள் பல நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உருக்கமாகப் பேசியுள்ளார் தீபக் சாஹரின் மனைவி ஜெயா சாஹர்.

சென்னையை விட்டு பிரிய மனமில்லை: இது குறித்து, ஜெயா சாஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளராக அமர்ந்து உற்சாகப்படுத்திய தருணங்கள் தொடங்கி, அதே மைதானத்தில் காதலை கொண்டாடியது வரை, அப்போது அங்கே தீபக் சஹார் காதலை வெளிப்படுத்தி சம்ம்மதம் கேட்டபோது - ‘ஆம்’ என ஒட்டுமொத்த உலகமும் பார்க்க நான் சம்மதம் தெரிவித்ததும் மறக்கவே முடியாத நினைவுகள்.

எனது நெஞ்சம் எப்போதும் இந்த அணியுடன் பிணைந்திருக்கும்.

இந்த அற்புதமான நினைவுகளுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் - சென்னை சூப்பர் கிங்ஸ், தீபக் சஹார்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

படம் | ஜெயா சாஹர் இன்ஸ்டா பதிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com