மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

53 பந்துகளில் சைம் அயூப் அதிரடி சதம்! தொடரை சமன் செய்தது பாக்!

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்தது பாகிஸ்தான் அணி.

News image
சைம் அயூப்
Updated On :26 நவம்பர் 2024, 1:27 pm

DIN

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்தது பாகிஸ்தான் அணி.

ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஜிம்பாப்வேயின் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் கிரெக் எர்வின் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 32.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டியோன் மையர்ஸ் 33 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளையும், அலி ஆஹா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜிம்பாப்வே வீரர்களால் வீழ்த்த முடியவில்லை.

அதிரடியாக விளையாடிய சைம் அயூப் 52 பந்துகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அப்துல்லா சாபிக் 48 பந்துகளில் 32 ரன்களும், சைம் அயூப் 113 ரன்களும்(17 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்தனர்.

18.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி வருகிற நவம்பர் 28 ஆம் தேதி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.