தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிங்க் பந்தில் ஆடுவது எப்படி? தோல்வியே காணாத ஆஸி.யை வீழ்த்த டிப்ஸ் வழங்கிய புஜாரா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் பிங்க் பந்தில் ஆடுவது குறித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார் புஜாரா.

News image

புஜாரா

Updated On :29 நவம்பர் 2024, 9:46 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி இரவு பகல் ஆட்டமாக பிங்க் பந்தில் நடைபெறவிருக்கிறது.

முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடிய வரலாறு இருக்கிறது. அதனால் அடுத்த போட்டி முக்கியமானதாக இருக்கும்.

இதுவரை 12 பிங்க் பந்து கிரிக்கெட்டில் 11 போட்டிகளில் ( 2024இல் மே.இ.தீ. இடம் 8 ரன்களில் தோல்வி) ஆஸி. வென்றுள்ளது. இந்திய அணி 5 போட்டிகளில் 4இல் வெற்றி (ஆஸி.யிடம் 2020இல் தோல்வி) பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் அனுபவம் மிகுந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் புஜாரா கூறியதாவது:

பிங்க் பந்தில் ஆடுவது எப்படி?

பிங்க் பந்தினை ஆடுவதற்கு உங்களுக்கு இன்னும் சிறிது நேரம் தேவை. நீங்கள் உங்களது ஃபுட் ஒர்க்கை (கால் நகர்த்தல்களை) விரைவாக்க வேண்டும். பிங்க் பந்து ஆடுகளத்தில் விழுந்து சறுக்கிக்கொண்டு வரும். அதனால், பேட்டர்களுக்கு சிவப்பு பந்துகளைவிடவும் நேரம் குறைவாக இருக்கும். அதனால் கால் நகர்த்தல்களை சரிப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.

தோல்வியே காணாத ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா பிங்க் பந்தில் சிறப்பாக விளையாடியுள்ளதால் இந்தப் போட்டி சவாலானதாக இருக்கும். பிங்க் பந்தில் ஒரேயொரு போட்டியில்கூட ஆஸி. தோற்றதில்லை. அதனால் அடுத்த போட்டியில் ஆஸி. மீண்டு வருமென நினைக்கிறேன்.

முதல் டெஸ்ட் சென்ற விதத்தினை பார்க்கும்போது நாம் சிறப்பாக விளையாடியுள்ளோம். அதனால் இந்தப் போட்டி சம அளவில் போட்டியாகவும் மிக சுவாரசியமாகவும் இருக்கும் என்றார்.

இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் டிச.6 முதல் டிச.10ஆம் தேதிவரை இரவு பகல் ஆட்டமாக நடைபெறும். 3ஆவது டெஸ்ட் பிரிஸ்பேனில் டிச.14 - டிச.18வரை நடைபெறும்.

4ஆவது டெஸ்ட் பாக்ஸிங் டே கிரிக்கெட் டிச.26 - டிச.30 வரை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும்.

5ஆவது, கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் திடலில் ஜன.3-ஜ.7ஆம் தேதி வரை நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.