75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

ஓய்வுபெறும் ஷகிப் அல் ஹசனுக்கு தனது பேட்டை பரிசளித்த விராட் கோலி!

ஓய்வுபெறும் ஷகிப் அல் ஹசனுக்கு விராட் கோலி தனது பேட்டை பரிசளித்துள்ளார்.

Published On :1 அக்டோபர் 2024, 6:10 pm IST

ஓய்வுபெறும் ஷகிப் அல் ஹசனுக்கு விராட் கோலி தனது பேட்டை பரிசளித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் 2-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஓய்வு பெறப்போகும் வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு தன் கையொப்பமிட்ட பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

வெளிநாடுகளில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஷகிப் அல் ஹசன் வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு வெளியேறும் வரை வேறு எந்தப் போட்டிகளிலும் விளையாட மாட்டேன் என்று தெளிவாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியிலும் விளையாடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஷகிப் அல் ஹசனுக்கு தனது பேட்டை பரிசளித்த விராட் கோலி

ஷகிப் அல் ஹசனுக்கு தனது பேட்டை பரிசளித்த விராட் கோலி

இரண்டாவது டெஸ்ட்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றவுடன் ஷகிப் அல் ஹசன் அருகில் சென்ற விராட் கோலி அவரிடம் தனது பேட்டை பரிசாக வழங்கினார்.

விராட் கோலி பேட்டை பரிசாக வழங்கியவுடன் இருவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். ஷகிப் அல் ஹசன் இந்தியாவிலும் மிகவும் பிரபலமானவர். ஐபிஎல்லில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், ஹைதராபாத் அணிக்காகவும் 71 போட்டிகளில் ஆடியுள்ளார்.

தற்போது வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர் ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹசன், ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

தற்போதைய வங்கதேசத்தில் இடைக்கால அரசும் ஷகிப் அல் ஹசனுக்கு பிரியாவிடை கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. கான்பூர் டெஸ்ட் போட்டி ஷகிப் அல் ஹசனுக்கு 71 ஆவது மற்றும் கடைசிப் போட்டியாக அமைந்து.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஷகிப் அல் ஹசன் முழுமையாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஷகிப் அல் ஹசன் தற்போது அமெரிக்காவில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.