ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலியின் இடத்தில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில், நாளை (ஜூன் 13) முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி இடம்பெறவில்லை. விராட் கோலி அணியில் இல்லாததால் மூன்றாவது இடத்தில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கெல் பேசியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி காயம் காரணமாக அணியில் இல்லை. அவருக்கான இடத்தில் எந்த வீரரை களமிறக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கு இஷான் கிஷன், கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த தொடரில் வீரர்களுக்கு வெவ்வேறு இடங்களில் களமிறங்கி விளையாடும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. எங்களிடம் இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பான திட்டங்களுடன் வருவோம் என்றார்.
காயம் காரணமாக விராட் கோலி விலகிய நிலையில், அண்மையில் அந்த வரிசையில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Anticipation has arisen among fans regarding who will step in for Virat Kohli in the ODI series against Afghanistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்! இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

டிராவிஸ் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஆர்சிபி ரசிகர்கள்! வலுக்கும் கண்டனம்!!

டி20 போட்டிகளில் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy




