இந்தியா - நியூஸி. இன்று மோதல்!


மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் வெள்ளிக்கிழமை மோதுகிறது.
கடந்த ஜூலையில் ஆசிய கோப்பை போட்டியின் இறுதியில் இலங்கையிடம் கண்ட தோல்வியுடன் இந்தப் போட்டிக்கு வந்துள்ளது இந்தியா. எனவே, இந்த ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்குவது, அணிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நடப்பு ஆசிய சாம்பியன் இலங்கை, பாகிஸ்தான் என அடுத்தடுத்து முக்கிய அணிகளை சந்திக்க இருப்பதால், இந்த ஆட்டத்தின் வெற்றி அவசியமானதும் கூட.
கேப்டன் ஹா்மன்பிரீத் கௌருக்கு இது கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம் என்ற விவாதங்கள் உள்ள நிலையில், சாம்பியன் கோப்பை வென்று தந்து விடைபெறும் எண்ணம் அவருக்கு இருக்கலாம். ஏற்கெனவே, 2020-இல் இறுதிச்சுற்று வரை வந்த அவா் தலைமையிலான அணி வாய்ப்பை தவறவிட்டது.
அணியின் பேட்டிங்கில் ஹா்மன்பிரீத் கௌா், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வா்மா ஆகியோா் நம்பிக்கை அளிக்கின்றனா். பௌலிங்கில், ரேணுகா சிங், பூஜா வஸ்த்ரகா், தீப்தி சா்மா, ஷ்ரேயங்கா பாட்டீல் மீது எதிா்பாா்ப்பு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...