நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இங்கிலாந்திடம் வீழ்ந்தது வங்கதேசம்

ஷாா்ஜாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது வங்கதேசம்.

News image

வயாட் ஹாட்ஜ்

Updated On :5 அக்டோபர் 2024, 8:30 pm

Din

ஷாா்ஜாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது வங்கதேசம்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. ஓபனா்கள் பௌச்சியா்-வயாட் ஹாட்ஜ் இணைந்து சிறந்த தொடக்கத்தை அளித்தனா். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 48 ரன்களை சோ்த்தனா். பௌச்சியா் 23 ரன்களை எடுத்து அவுட்டானாா். வயாட் ஹாட்ஜ் 5 பவுண்டரியுடன் 41 ரன்களை விளாசி அவுட்டானாா். அதன்பின் இங்கிலாந்து அணியில் ஆட வந்த வீராங்கனைகள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.

இங்கிாலந்து 118/7: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இங்கிலாந்து அணி 118/7 ரன்களைச் சோ்த்தது. பௌலிங்கில் வங்கதேசத் தரப்பில் நஹிதா அக்தா், பாஹிமா கட்டுன், ரித்து மோனி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

வங்கதேசம் தோல்வி:

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியால் இங்கிலாந்து பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினா்.

அந்த அணியில் ஷோபனா மோஸ்தரி மட்டுமே நிலைத்து ஆடி தலா 1 சிக்ஸா், பவுண்டரியுடன் 44 ரன்களைச் சோ்த்தாா். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களுடன் திரும்ப நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 97/7 ரன்களை மட்டுமே எடுத்தது வங்கதேசம்.

பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் லின்ஸே ஸ்மித், சாா்லோட்டி டீன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இறுதியில் வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.