ஹாங்காங் சிக்ஸர் லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் நடைபெறும் ஹாங்காங் சிக்ஸர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களும் கலந்து கொள்வார்கள் என்று ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டிகள் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. ஹாங்காங் சிக்ஸர் என்பது கிரிக்கெட் அணியில் 11 பேருக்கு பதிலாக 6-பேர் கொண்ட அணியாக விளையாடுவர்.
இந்தத் தொடரில் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, ஹாங்காங், நேபாளம், நியூசிலாந்து, ஓமன், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகளும் இந்தத் தொடரில் விளையாடவுள்ளன. இந்தத் தொடர் 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வென்றிருந்தது.
போட்டி விதிமுறைகள்
ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். ஒரு அணிக்கு அதிகபட்சமாக 5 ஓவர்கள் கொடுக்கப்படும். இறுதிப்போட்டியிலும் 5 ஓவர்கள் கொடுக்கப்படும். ஆனால், ஒரு ஓவருக்கு 6 பந்துகளுக்கு பதிலாக 8 பந்துகள் வீச வேண்டும்.
விக்கெட் கீப்பரைத் தவிர்த்து அணியில் உள்ள அனைவரும் பந்துவீசிக் கொள்ளலாம். அதே போல வைட், நோபாலுக்கு 2 ரன்கள் வழங்கப்படும்.
5 ஓவருக்குள் 5 விக்கெட்டுகள் விழும் பட்சத்தில் அவுட்டாகாத பேட்டர் மட்டும் பேட்டிங் செய்வார். அணியில் அவுட்டான ஒரு வீரர் ரன் உதவிக்கு மட்டும் களத்தில் நிற்பார்.
ஒரு வீரர் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்ததும் ரிட்டயர்ஹர்ட் கொடுத்து வெளியேவரவேண்டும். ஒருவேளை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அவுட் ஆகும் பட்சத்தில் ரிட்டயர்ஹர்ட் ஆன வீரருக்கும் மறுவாய்ப்பு அளிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஷ்ரேயாஸ், சூர்யவன்ஷி, ரஜத் படிதாரை இந்திய டி20 அணியில் தேர்வு செய்க: மே.இ.தீவுகள் வீரர்

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணியில் இரு தமிழா்கள்
டி20 தொடர்: ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியினர்!
வீடியோக்கள்

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை


