8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசை: 3-வது இடத்திற்கு முன்னேறினார் ஹார்திக் பாண்டியா!

டி20 கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஹார்திக் பாண்டியா 3-வது இடத்திற்கு முன்னேறினார்.

Published On :9 அக்டோபர் 2024, 7:42 pm IST

சர்வதேச டி20 கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் ஹார்திக் பாண்டியா 3-வது இடத்திற்கு முன்னேறினார்.

குவாலியரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அசத்தலாக விளையாடிய ஹார்திக் பாண்டியா, 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39* ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல், பந்துவீச்சில் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

ஹார்திக் பாண்டியா

ஹார்திக் பாண்டியா

இதன் மூலம் ஹார்திக் பாண்டியா, டி20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசைப் பட்டியலில் 253 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி வீரர் லியாம் லிவிங்ஸ்டன் முதலிடத்திலும், 235 புள்ளிகளுடன் நேபாள அணி வீர திபேந்திர சிங் ஐரீ 2-வது இடத்திலும், 216 புள்ளிகளுடன் ஹர்திக் பாண்டியா 3-வது இடத்திலும் உள்ளனர்.

தரவரிசைப் பட்டியல்

தரவரிசைப் பட்டியல்

வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் 86* ரன்கள் அடித்து அசத்திய ரவீந்திர ஜடேஜா, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

ரவீந்திர ஜடேஜா 468 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 358 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.