5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா விலகியுள்ளார்.

Hardik Pandya

ஹார்திக் பாண்டியா

Published On :

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட அதிகராபூர்வமற்ற ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடர் நாளை (அக்டோபர் 6) தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்தியா ஏ அணியிலிருந்து காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

காயம் காரணமாக விலகியுள்ள அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்ஜ் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்தே ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா காயம் காரணமாக தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அவர் இந்திய அணிக்காக கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். அதன் பின், அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.

23 வயதாகும் சூர்யான்ஷ் ஷெட்ஜ், மிதவேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். அவர் இந்திய அணிக்காக 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 15 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் நமன் திர் இடம்பெற்றுள்ளதால், அவருக்குப் பதிலாக இந்தியா ஏ அணியில் அனுகுல் ராய் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி விவரம்

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), தேவ்தத் படிக்கல் (துணைக் கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, குமார் குஷாக்ரா, ரஜத் படிதார், பிரப்சிம்ரன் சிங், சாய் சுதர்சன், அனுகுல் ராய், அர்ஷின் குல்கர்னி, நிஷாந்த் சிந்து, சூர்யான்ஷ் ஷெட்ஜ், அர்ஷத் கான், குர்ஜப்நீத் சிங், விப்ராஜ் நிகம், யஷ் தாக்குர்.

Summary

All-rounder Hardik Pandya has withdrawn from the ODI series against Australia A due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.