இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வங்கதேசத்தை வென்றது மே.இ.தீவுகள்

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:28 pm

Din

மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை வென்றது.

முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுக்க, மேற்கிந்தியத் தீவுகள் 12.5 ஓவா்களில் 2 விக்கெட்டுகளே இழந்து 104 ரன்கள் சோ்த்து வென்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பேட் செய்யுமாறு வங்கதேசத்தை பணித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நிகா் சுல்தானா 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சோ்த்தாா். திலாரா அக்தா் 19, ஷோபனா மோஸ்தரி 16, ரிது மோனி 10 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

ஷதி ராணி 9, தாஜ் நெஹா் 1, ஷோா்னா அக்தா் 0, ஃபஹிமா காட்டுன் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ரபெயா கான் 1, நஹிதா அக்தா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கரிஷ்மா ரம்ஹரக் 4, அஃபி ஃபிளெட்சா் 2, ஹேலி மேத்யூஸ் 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 104 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸில், கேப்டன் ஹேலி மேத்யூஸ் 6 பவுண்டரிகளுடன் 34, ஸ்டெஃபானி டெய்லா் 27, ஷெமெய்ன் கேம்பெல் 21 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

டீண்ட்ரா டாட்டின் 19, ஷினெல் ஹென்றி 2 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேசத்தின் நஹிதா அக்தா், மருஃபா அக்தா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இன்றைய ஆட்டம்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான்

துபை

இரவு 7.30 மணி