இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

பாகிஸ்தானில் விளையாடிவிட்டு அதே நாளில் இந்தியா சென்றுவிடுங்கள்; செவிசாய்க்குமா பிசிசிஐ?

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது.

கோப்புப் படம் - படம் | பிசிசிஐ

Published On :

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளை லாகூர், ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்திய அணி கடைசியாக கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன் பின், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இந்திய அணி மறுத்து வரும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் முறையில் நடத்தவும் ஐசிசி திட்டமிட்டு வருகிறது. அதன்படி, இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபை அல்லது இலங்கையில் நடத்தப்படலாம் என்ற ஆலோசனையும் பரிசீலனையில் உள்ளது.

அதே நாளில் இந்தியா சென்றுவிடுங்கள்

பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது.

அதன்படி, போட்டி நடைபெறும் நாள்கள் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடிவிட்டு அதேநாளில் மீண்டும் இந்தியாவுக்கே சென்றுவிடலாம் என்ற யோசனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாய்மொழியாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தானில் விளையாட தயங்கும் பட்சத்தில், இந்திய அணி போட்டி நாள்களில் பாகிஸ்தானில் விளையாடிவிட்டு மீண்டும் அதே நாளில் புது தில்லிக்கோ அல்லது சண்டீகருக்கோ உடனே சென்றுவிடலாம். அதற்கேற்றவாறு அவர்களது பயணம் தொடர்பான விமான அட்டவணையை அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான போட்டிகளை லாகூரில் நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் லாகூர் இருப்பதால் இந்திய அணிக்கான போட்டிகளை லாகூரில் நடத்த பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி திட்டமிட்டு வரும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடினாலும் அல்லது விளையாடாவிட்டாலும் இறுதிப்போட்டியானது லாகூரில் நடத்தப்பட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.