பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மே.இ.தீவுகள் தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்; இங்கிலாந்துக்கு புதிய கேப்டன் நியமனம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.

News image

ஜோஸ் பட்லர் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :21 அக்டோபர் 2024, 7:53 pm IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஜோஸ் பட்லர் விலகல்

காயம் காரணமாக கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாடாத இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணியை ஹாரி ப்ரூக் கேப்டனாக வழிநடத்தினார்.

லியம் லிவிங்ஸ்டன் கேப்டனாக நியமனம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விலகிய நிலையில், ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக லியம் லிவிங்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். 31 வயதாகும் லியம் லிவிங்ஸ்டனுக்கு லங்காஷைர் அணியை வழிநடத்திய அனுபவம் இருக்கிறது.

லியம் லிவிங்ஸ்டன் (கோப்புப் படம்)

லியம் லிவிங்ஸ்டன் (கோப்புப் படம்)

ஒருநாள் தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ள போதிலும், டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவர் இடம்பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்

ஜோஸ் பட்லர் (டி20 தொடருக்கு மட்டும்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கோப் பெத்தல், ஜாஃபெர் சோஹான், சாம் கரண், வில் ஜாக்ஸ், லியம் லிவிங்ஸ்டன், சாக்யூப் மஹ்முத், டேன் மௌஸ்லி, ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத், பில் சால்ட், ரீஸ் டாப்ளே மற்றும் ஜான் டர்னர்.

(பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியிலிருந்து இரண்டு வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள்)

மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து தொடர் விவரம்

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் - அக்டோபர் 31, ஆண்டிகுவா

2-வது ஒருநாள் - நவம்பர் 2, ஆண்டிகுவா

3-வது ஒருநாள் - நவம்பர் 6, பார்படாஸ்

டி20 தொடர்

முதல் டி20 - நவம்பர் 9, பார்படாஸ்

2-வது டி20 - நவம்பர் 10, பார்படாஸ்

3-வது டி20 - நவம்பர் 14, செயிண்ட் லூசியா

4-வது டி20 - நவம்பர் 16, செயிண்ட் லூசியா

5-வது டி20 - நவம்பர் 17, செயிண்ட் லூசியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.