அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஐபிஎல் 2025: மெகா ஏலம் எப்போது?

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நடைபெறும் தேதி, இடம் பற்றி...

News image
கோப்புப்படம்- ANI
Updated On :21 அக்டோபர் 2024, 6:15 am

DIN

ஐபிஎல் 2025-ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெறும் இடம், தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபை, சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆய்வு செய்தது. இந்த நிலையில், செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தை பிசிசிஐ அதிகாரிகள் சிலர் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்வதற்காக ரியாத்துக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏலம் எப்போது?

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் நிர்வாகத்தினர், தங்கள் அணியில் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 மாலை 5 மணிக்குள் தெரிவிக்குமாறு பிசிசிஐ காலக்கெடு விதித்துள்ளது.

இதையடுத்து, நவம்பர் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் மெகா ஏலம் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஏலத்தில் பங்கேற்கவுள்ள அணிகளின் குழுக்களுக்கு பயணத் திட்டம் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், விரைவில் தேதியையும் இடத்தையும் தெரிவிக்குமாறு அணி நிர்வாகத்தினர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில், ஓரிரு நாள்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

குழப்பத்தில் பிசிசிஐ?

பெர்த் நகரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, நவ. 22 முதல் 26 வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியை ஒளிபரப்பும் டிஸ்னி பிளஸ் நிறுவனம்தான் மெகா ஏலத்தையும் நேரலையில் ஒளிபரப்பவுள்ளது.

டெஸ்ட் போட்டி நடைபெறும் அதே நாளில் ஏலமும் நடைபெற முன்மொழியப்பட்டுள்ளதால், ஒளிபரப்பில் பிரச்னை ஏற்படுமா என்ற தயக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், ஆஸ்திரேலியா நேரத்தை கணக்கில் கொண்டு, மெகா ஏலத்தை பிற்பகலில் நடத்தினால், ஒளிபரப்பில் எவ்வித பிரச்னையும் ஏற்படாது என்றும் பிசிசிஐ நிர்வாகிகளின் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.