இந்த முறை மிஸ் ஆகாது; இந்தியாவுக்கு சவால் விடுகிறாரா பாட் கம்மின்ஸ்?

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து பார்டர் - கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றுவதே தங்களின் நோக்கம் என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)
பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து பார்டர் - கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றுவதே தங்களின் நோக்கம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து பார்டர் - கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றுவதே தங்களின் நோக்கம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பாட் கம்மின்ஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக சிறிது ஓய்வு கிடைத்தது. அதனால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மிகுந்த புத்துணர்ச்சியுடன் உள்ளேன். கடந்த சில டெஸ்ட் தொடர்களாக இந்தியாவுக்கு எதிராக எங்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவதில் நாங்கள் எப்போதும் பெருமைப்படுகிறோம்.

கடந்த இரண்டு பார்டர் - கவாஸ்கர் தொடர்கள் நிறைவடைந்து நீண்ட நாள்கள் ஆகின்றன. அந்த தொடர்களை இழந்ததிலிருந்து நாங்கள் வெளியில் வந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால், ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது, சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு அதிக அளவில் இருக்கும். கடந்த முறை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் போட்டி நிறைந்ததாக இருந்தது. துரதிருஷ்டவசமாக எங்களால் வெற்றி பெற முடியவில்லை. கடந்த முறை இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இந்த முறையும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர். கடந்த இரண்டு முறையாக ஏற்பட்ட தொடர் தோல்விகளை இந்த முறை திருத்தியமைப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com