பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இந்திய அணி எங்கு தவறு செய்கிறது? பந்துவீச்சு பயிற்சியாளர் பதில்!

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசியுள்ளார்.

News image

படம் | பிசிசிஐ

Updated On :25 அக்டோபர் 2024, 7:50 pm IST

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசியுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

எங்கு தவறு செய்கிறது இந்திய அணி?

முதல் இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கத் தவறுவது அணிக்கு அழுத்தமான சூழலை உருவாக்குவதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த மோர்னே மோர்க்கல் பேசியதாவது: அணி சிறப்பாக செயல்பட தவறுவதற்கு பேட்ஸ்மேன்கள் காரணமா அல்லது பந்துவீச்சாளர்கள் காரணமா என்ற கேள்விக்குள் நான் ஒருபோதும் செல்ல விரும்புவதில்லை. ஆனால், டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிப்பது முக்கியம். கடந்த இரண்டு போட்டிகளாக இந்திய அணி அதனை செய்யத் தவறிவிட்டது.

எங்களிடம் உலகத் தரத்திலான பேட்டிங் வரிசை இருக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர்கள். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு அதிக அளவிலான ரன்கள் குவிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணி இந்த கடினமான சூழ்நிலையிலிருந்து எப்படி மீண்டு வரப் போகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது என்றார்.

நியூசிலாந்துக்கு பாராட்டு

நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டதாக மோர்னே மோர்க்கல் அந்த அணியை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறேன். இந்திய அணி வீரர்கள் ஒரு ரன் எடுத்து ஸ்டிரைக்கை தொடர்ச்சியாக மாற்ற மிகவும் சிரமப்பட்டனர். அந்த அளவுக்கு நியூசிலாந்து அணி சிறப்பாக பந்துவீசியது. மிட்செல் சாண்ட்னர் சிறப்பாக பந்துவீசினார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி மிகவும் தயாராக வந்துள்ளது. இந்திய ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப நியூசிலாந்து அணி தங்களை உடனடியாக சிறப்பாக மாற்றிக் கொண்டுள்ளனர். இதுவரை நியூசிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.