தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 27) அறிவித்துள்ளது.

News image
- படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :27 அக்டோபர் 2024, 2:17 pm

DIN

ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 27) அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.

முதலில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநள் போட்டி நவம்பர் 4 ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்,

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாபர் அசாம் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.