விராட் கோலி இன்ஸ்டாவில் பிளாக் செய்திருந்தார்..! சுவாரசியம் பகிர்ந்த மேக்ஸ்வெல்!

ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் விராட் கோலி தன்னை இன்ஸ்டாவில் பிளாக் செய்தது குறித்து பேசியுள்ளார்.
விராட் கோலி, மேக்ஸ்வெல்.
விராட் கோலி, மேக்ஸ்வெல்.
Published on
Updated on
1 min read

மேக்ஸ்வெல் ஆர்சிபி அணியில் 2021 ஐபிஎல் போட்டியில் தேர்வு செய்யப்பட்டார். ரூ.14.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஆர்சிபியில் 52 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 1,266 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 159.25 என்பது குறிப்பிடத்தக்கது. 12 அரைசதம் அடித்துள்ளது குறுப்பிடத்தக்கது.

ஆர்சிபியில் இணைந்து விளையாடியபோது விராட் கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்தது குறித்து காரணம் கூறியதாக மேக்ஸ்வெல் பேசியது வைரலாகியுள்ளது.

நேர்காணல் ஒன்றில் மேக்ஸ்வெல் பேசியதாவது:

நான் ஆர்சிபியில் இணையும்போது எனக்கு குறுஞ்செய்தி அனுப்பும் முதல் ஆளாக விராட் இருப்பார் என்று நினைத்தேன். ஐபிஎல்-க்கு முன்பாக விராட் உடன் இணைந்து பயிற்சி செய்தேன். சிறிது நேரம் உரையாட நேரம் கிடைத்தது. பின்னர் அவரை இன்ஸ்டாவில் தேடினேன். அவரை கண்டுப் பிடிக்க முடியவில்லை. ஆனால், விராட் இருப்பார் என்று மட்டும் தெரியும்.

பின்னர்தான் யாரோ ஒருவர் விராட் உங்களை பிளாக் செய்திருந்தால் காண்பிக்காது என்றார். நான் இதை நம்பவில்லை.

பின்னர் விராட்டை பார்க்கும்போது என்னை இன்ஸ்டாவில் பிளாக் செய்தீர்களா எனக் கேட்டேன். அதற்கு விராட் ‘ஆமாம். நீங்கள் என்னை டெஸ்ட் தொடரின்போது கிண்டல் செய்ததால் செய்திருப்பேன்’ என்றார். அதுவும் சரிதான். இனிமேல் நண்பர்களாக இருப்போமா என்றேன். பின்னர் நாங்கள் சிறந்த நண்பர்களானோம்.

ஐபிஎல் முழுவதும் எங்களுக்கு சிறப்பான உறவு இருந்தது. அவருடனான ஓய்வறை, அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல், அநேகமாக அப்போதுதான் நானும் தந்தையானேன். அதனால் நாங்கள் நிறையவே நெருங்கிய நண்பர்களானோம்.

நாங்கள் இளமையாக இருந்தபோது இருவருமே ஆடுகளத்தில் அவசரமாகவும் துருதுருவென்றும் இருப்போம். அப்போது என்னுடைய கேப்டன் ‘மேக்ஸி, விராட்டிடம் நேரடியாக சென்று எதாவது பேசு. இன்னும் கடினமாக உழைக்கசொல் என்பார். ஆனால், பின்னர் நாங்கள் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com