11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பேசிய பாட் கம்மின்ஸ்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

News image

பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)

Updated On :3 செப்டம்பர் 2024, 5:19 pm IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் கோப்பை

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி அசத்தியது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடரை வெல்வோம்

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை வென்று நீண்ட நாள்கள் ஆகிறது. இந்த முறை இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக அதிக முறை விளையாடியுள்ளோம். பல முறை இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்துள்ளோம். பலமுறை இந்தியாவுக்கு எதிராக வெற்றியும் பெற்றிருக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தோம். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. பார்டர் கவாஸ்கர் கோப்பை இரண்டு அணிகளுக்கும் சவாலானதாக இருக்கப் போகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.