அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 94.20 ஆக நிறைவு!பணவீக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 319 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,150-க்கு கீழ் நிறைவு!மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவாலுக்கு நியூசிலாந்து தயார்: மாட் ஹென்றி

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவாலுக்கு நியூசிலாந்து அணி தயாராக உள்ளதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தெரிவித்துள்ளார்.

Matt Henry

மாட் ஹென்றி

Updated On :

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவாலுக்கு நியூசிலாந்து அணி தயாராக உள்ளதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

பே ஓவலில் இன்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 244 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை டக் அவுட்டாக்கி அசத்தினார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான சவாலுக்கு நியூசிலாந்து அணி தயாராக இருப்பதாக மாட் ஹென்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு குழுவாக நாங்கள் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீச முயற்சி செய்து வருகிறோம். இந்தத் தொடர் முழுவதுமே நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். உலகத் தரத்திலான இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களை அழுத்தத்தில் வைக்க முடியும் என்பதை வெளிக்காட்டியுள்ளோம். முதல் இரண்டு போட்டிகளிலும் அதனை செய்தோம். அந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும், சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினோம்.

மாட் ஃபிஷர் மற்றும் கைல் ஜேமிசன் போன்ற வீரர்கள் மிகவும் நன்றாக பந்துவீசுகிறார்கள். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உலகத் தரத்திலான வீரர்கள். அவர்கள் இருவரது விக்கெட்டினையும் வீழ்த்தியது மகிழ்ச்சியளித்தது. இந்திய அணியில் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. அதனால், முட்டாள்தனமாக நான் இங்கு எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால், இந்தத் தொடர் உண்மையில் மிகவும் சிறப்பான தொடராக அமைந்துள்ளது. அடுத்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்வதில் கவனம் செலுத்தவுள்ளோம்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளோம். அந்தத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான சவாலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

Summary

New Zealand fast bowler Matt Henry has stated that his team is prepared for the challenge of the Test series against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.