இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகியுள்ளதைப் பற்றி...
பிளேர் டிக்னர்.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகியுள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது வெல்லிங்டன் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள கேக்லே ஓவலில் வருகிற நவ. 27 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னர் 2-ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மேட் ஃபிஸ்ஸர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிக்னர், டெஸ்ட் போட்டி பயிற்சியின் போது காயமடைந்தார். இதனால், அவர் வெல்லிங்டன் டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை.
2025 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட்டில் நியூசிலாந்து அணியில் அறிமுகமான 27 வயதான ஃபிஸ்ஸர், இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. இவர், இந்தியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் 4-லும், 5 டி20 போட்டிகளில் 2-லும் விளையாடி ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.
Summary
New Zealand fast bowler Blair Tickner will miss the second Test against India, due to start on Friday, with a hamstring injury. Matt Fisher has been called up to replace him.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

