பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சென்னை டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் பந்துவீச்சு!

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பற்றி...

News image
முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸ்.- படம்: பிசிசிஐ/எக்ஸ்
Updated On :19 செப்டம்பர் 2024, 4:12 am

DIN

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியினர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளனர்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியினர், 2 டெஸ்ட் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பந்த் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

வங்கதேச அணி

ஷத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்ஃபிகா் ரஹிம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ்(கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சவாலான போட்டி

வங்கதேசம், பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றிய நிலையில் இந்தத் தொடருக்கு வந்துள்ளது.

அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் விளையாடிய 44 டெஸ்ட்டுகளில், 40 ஆட்டங்களில் வென்று இந்தியா ஆதிக்கம் செலுத்துவதால் இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.