இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை மகளிரணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 20) அறிவித்துள்ளது.

படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை மகளிரணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 20) அறிவித்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதலில் டி20 உலகக் கோப்பைப் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. அங்கு நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

இலங்கை அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று அறிவித்துள்ளது.

இலங்கை அணியை சமாரி அத்தப்பட்டு கேப்டனாக வழிநடத்துகிறார். ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை அணியே, உலகக் கோப்பைத் தொடருக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இனோகா ரணவீரா மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணி விவரம்

சமாரி அத்தப்பட்டு (கேப்டன்), ஹர்ஷிதா சமரவிக்கிரம, விஷ்மி குணரத்னே, கவிஷா தில்ஹாரி, நிலாக்‌ஷி டி சில்வா, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, சச்சினி நிசன்சலா, உதேசிகா பிரபோதனி, இனோஷி ஃபெர்னாண்டோ, அச்சினி குலசூர்யா, இனோகா ரணவீரா, ஷாஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா மற்றும் சுகந்திகா குமாரி.

ரிசர்வ் வீராங்கனை - கௌசினி நுத்யங்கானா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.