தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

2-வது டெஸ்ட்டில் பும்ராவுக்கு பதில் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள்: முன்னாள் இந்திய வீரர்

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அல்லது முகமது சிராஜுக்கு பதிலாக யஷ் தயாளை முயற்சிக்கலாம்.

News image

படம் | AP

Updated On :26 செப்டம்பர் 2024, 4:06 pm

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அல்லது முகமது சிராஜுக்கு பதிலாக யஷ் தயாளை முயற்சிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

யஷ் தயாளை முயற்சி செய்யுங்கள்

இந்திய அணியின் இடதுகை வேகப் பந்துவீச்சாளரான யஷ் தயாள் திறமை வாய்ந்தவர் எனவும், ஜஸ்பிரித் பும்ரா அல்லது முகமது சிராஜுக்கு பதிலாக அணியில் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

யஷ் தயாள்

யஷ் தயாள் - படம் | பிசிசிஐ

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இடதுகை வேகப் பந்துவீச்சாளரை வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பு. சில காலமாக இந்திய அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இடதுகை வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லை. அதனால் இடதுகை வேகப் பந்துவீச்சாளரான யஷ் தயாளுக்கு வாய்ப்பளிக்கலாம். யஷ் தயாளுக்கு அதிக அளவிலான திறமை உள்ளது. அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளிப்பதால் எந்த ஒரு தீங்கும் ஏற்படாது என நினைக்கிறேன்.

பார்த்திவ் படேல் (கோப்புப் படம்)

பார்த்திவ் படேல் (கோப்புப் படம்)

சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் அணியில் விளையாடுவார்கள் என நினைக்கவில்லை. ரிஷப் பந்த் அணியில் மீண்டும் தனது இடத்தை பிடித்துள்ளார். சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் மிக மிக திறமை வாய்ந்த வீரர்கள். அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட மிகவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அவர்களுக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்.

இந்தியா - வங்கதேசம் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (செப்டம்பர் 27) கான்பூரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.