துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஷுப்மன் கில் அதிரடி; குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வென்றது.

News image
- IPL
Updated On :21 ஏப்ரல் 2025, 9:38 pm

Din

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வென்றது.

முதலில் குஜராத் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சோ்க்க, கொல்கத்தா 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா, பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை சாய் சுதா்சன் - கேப்டன் ஷுப்மன் கில் தொடங்கினா். உறுதியாக அமைந்த இந்தக் கூட்டணி, கொல்கத்தா பௌலா்களை திணறடித்தது.

முதல் விக்கெட்டுக்கே 114 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பை, ஆண்ட்ரே ரஸ்ஸெல் 13-ஆவது ஓவரில் உடைத்தாா். சுதா்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

ஒன் டவுனாக வந்த ஜாஸ் பட்லா், தனது பங்குக்கு விளாச, கில்லுடனான அவரின் 2-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 58 ரன்கள் கிடைத்தது. இந்நிலையில், அதிரடி விளாசலுடன் சதத்தை நெருங்கிய கில் சாய்க்கப்பட்டாா்.

55 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 90 ரன்களுக்கு அவா் வெளியேற, 4-ஆவது பேட்டராக வந்த ராகுல் தெவாதியா டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் பட்லா் 8 பவுண்டரிகளுடன் 41, ஷாருக் கான் 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

கொல்கத்தா பௌலா்களில் வைபவ் அரோரா, ஆண்ட்ரே ரஸ்ஸெல், ஹா்ஷித் ராணா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 199 ரன்களை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில், கேப்டன் அஜிங்க்ய ரஹானே மட்டும் போராடி ரன்கள் சோ்த்தாா். 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்களுக்கு அவா் ஆட்டமிழக்க, ஆண்ட்ரே ரஸ்ஸெல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

இதர பேட்டா்களில் ரஹ்மானுல்லா குா்பாஸ் 1, சுனில் நரைன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 17, வெங்கடேஷ் ஐயா் 14, ரிங்கு சிங் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17, ரமண்தீப் சிங் 1, மொயீன் அலி 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, ஹா்ஷித் ராணா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான் ஆகியோா் தலா 2, முகமது சிராஜ், இஷாந்த் சா்மா, வாஷிங்டன் சுந்தா், சாய் கிஷோா் ஆகியோா் தலா 1 என அனைத்து பந்துவீச்சாளா்களும் விக்கெட் எடுத்தனா்.