

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது 44-ஆவது அரைசதத்தை நிறைவுசெய்து ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியது.
பிரிஸ்பேனில் நேற்று (டிச.4) தொடங்கிய இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 334-க்கு ஆல் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
ஆஸி. அணி தற்போது 58.3 ஓவரில் 300/5 ரன்களை எடுத்துள்ளது. கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித் ஒரே ஓவரில் ஆட்டமிழந்து சொதப்பினார்கள்.
ஸ்டீவ் ஸ்மித் 10, 557 ரன்களை எடுத்துள்ளார். அதில் 36 சதங்கள், 44 அரைசதங்கள் அடங்கும். சதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 61 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.