ஜஸ்டின் கிரீவ்ஸ் முதல் இரட்டைச் சதம்: கிறிஸ்ட்சர்ச்சில் டெஸ்ட் டிராவில் முடிவு!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ் பேட்டிங் குறித்து...
West Indies' Justin Greaves makes wins against New Zealand on Day 5 of their cricket test match in Christchurch, New Zealand,
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்.படம்: ஏபி
Updated on
1 min read

நியூசிலாந்துக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டைச் சதம் அடித்து அணியை மீட்டார்.

கிறிஸ்ட்சர்ச்சில் டிச.1ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 231-க்கு ஆல் அவுட்டாக, மே.இ.தீ. 167க்கு ஆல் அவுட்டானது.

இரண்டாம் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து 466/8 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

இமாலய இலக்கை சேஸ் செய்து விளையாடிய மே.இ.தீ. அணி ஐந்தாம் நாள் முடிவில் 457/6 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி எளிதாக வெற்றிபெறுமென இருந்த நிலையில், மே.இ.தீ. அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

குறிப்பாகமே.இ.தீ. அணியின் லோயர் மிடில் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

ஷாய் ஹோப் 140 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜஸ்டின் கிரீவ்ஸ் தனது முதல் இரட்டைச் சதம் (202 ரன்கள் 388 பந்துகளில்) அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இவருக்கு உறுதுனையாக கெமர் ரோச் 233 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Summary

The West Indies' first Test against New Zealand ended in a draw.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com