

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் கைவிடப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பிரபல ஹிந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.
என்ன பிரச்னை?
இவருடன் கடந்த நவ.23ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், திருமணத்தை ஒத்திவைப்பதாகக் கூறப்பட்டது. பின்னர், அவரது காதலன் யாரோ ஒரு பெண்ணுடன் தவறாக பேசும்படியான ஸ்கிரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவின.
அதனைத் தொடர்ந்து, திருமணம் நடைபெறுமா என்பது கேள்விக்குரியானது.
திருமணம் நின்றுவிட்டது...
இது குறித்து மௌனம் காத்து வந்த ஸ்மிருதி, தற்போது தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில வாரங்களாக எனது வாழ்க்கையைச் சுற்றி பல அனுமானங்கள் பரவின. அதனால், நான் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நான் மிகவும் தனிப்பட்ட வாழ்வை விரும்புவர். இருந்தும் திருமணம் நின்றுவிட்டதை உங்களுக்கு தெளிவுப்படுத்துகிறேன்.
இத்துடன் இந்த விவாகரத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் நினைக்கிறேன். நீங்களும் இதேபோல் இருக்க விழைகிறேன்.
அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய நேரம் இது...
இரண்டு குடும்பத்தினரின் தனிப்பட்ட விஷயத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இதிலிருந்து வெளியேறி நாங்கள் எங்களது அடுத்த கட்டத்திற்கு செல்ல வழிவிடுங்கள்.
நாம் ஒவ்வொருவருக்கும் உயர்ந்த நோக்கம் இருக்கிறது. எனக்கு இந்திய நாட்டிற்காக சிறப்பாக விளையாட வேண்டும்.
தொடர்ந்து விளையாடி இந்தியாவுக்கு பல கோப்பைகளை வெல்ல வேண்டும். அங்குதான் எனது முழு கவனமும் இருக்கிறது.
அனைவருக்கும் நன்றி. அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய நேரம் இது எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.