

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது அபாரமான ஃபீல்டிங்கினால் ஆட்டத்தை மாற்றியுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் - வில் ஜாக்ஸ் கூட்டணி முறியடிக்காமல் ஆஸி. அணியினர் திணறிவந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனது அற்புதமான கேட்ச்சினால் ஆட்டத்தை மாற்றினார்.
பிரிஸ்பேனில் கடந்த டிச.4ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 334க்கு ஆல் அவுட்டானது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 511-க்கு ஆல் அவுட்டானது.
தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து 241க்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் எடுத்து, 64 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
ஸ்டோக்ஸ் - வில் ஜாக்ஸ் கூட்டணி 96 ரன்கள் எடுத்த நிலையில் நெசெர் பந்துவீச்சில் ஸ்லிப்பில் ஒரு கையால் பந்தை தாவிப் பிடித்து ஸ்மித் அசத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.