

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா 74 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 ஆட்டம் கட்டாக்கில் இன்று(டிச. 9) நடைபெற்றது. இந்தப் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியில் மிரட்டிய ஹார்திக் பாண்டியா 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய தென்னாப்பிரிக்க அணியின் முதல் விக்கெட்டாக குயிண்டன் டி காக்கை முதல் ஓவரிலேயே காலி செய்தார் அர்ஷ்தீப் சிங். அதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.