
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 356 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 357 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக துணைக் கேப்டன் ஷுப்மன் கில் 112 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களிலும், விராட் கோலி 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்வரிசையில் அதிரடிகாட்டிய விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 29 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார்.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 4 விக்கெட்டுகளும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.