காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிட்னி திடலில் இந்தியாவின் சாதனைகள் என்ன?

சிட்னி திடலில் இந்தியாவின் சாதனைகள் பற்றி..

News image

இந்திய கிரிக்கெட் அணி

படம் | ஏபி

Updated On :2 ஜனவரி 2025, 11:17 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி திடலில் நாளை(ஜன.3) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் இருக்கிறது.

இதுவரை நடந்து முடிந்த 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்றது. ஒரு போட்டி சமனில் முடிந்தது.

2014-2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலிய அணி பார்டர்- கவாஸ்கர் தொடரை வெல்லுவதற்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.

அதை பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினர் வென்று காட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சரிவுகளைச் சந்தித்து வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இதனால், சிட்னி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இருப்பினும், சிட்னி மைதானத்தில் இந்திய அணியின் சாதனைகள் மிகவும் மோசமாகவே இருக்கின்றன.

இதுவரை சிட்னி மைதானத்தில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் 7 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.

இவ்விரு அணிகளும் முதன் முறையாக 1948 ஆம் ஆண்டு மோதிக்கொண்டன. இந்தப் போட்டி மழையால் சமனில் முடிந்தது. இந்தியா ஒரேயொரு முறை மட்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 1978 ஆம் ஆண்டு நடந்தப் போட்டி எடப்பள்ளி பிரசன்னா 8 விக்கெட்டுகள் வீழ்த்திய அந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் ஒரு வெற்றிகூட பெறவில்லை.

கடைசியாக இந்தியா விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இறுதியாக 2020-2021 ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் புஜாரா மற்றும் அஸ்வின் - ஹனுமா விஹாரி ஆகியோரின் நிதான ஆட்டத்தால் டிராவில் முடிந்தது. அதற்கு முன்னதாக, 2019 ஆம் ஆண்டு போட்டி புஜாராவில் 193 ரன்கள் விளாசிய போதிலும், மழையால் போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.

இதுவரை சிட்னி மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 785 ரன்கள் விளாசியுள்ளார். சராசரி 157 ரன்களாகும். பந்துவீச்சில் அனில் கும்ப்ளே 20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சிட்னியில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 705/7 ரன்களாகும். அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 241 ரன்களும் விவிஎஸ் லக்‌ஷ்மண் 178 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.