பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஓடிஐ! ஆப்கன் பந்துவீச்சு தேர்வு... பிரின்ஸ் யாதவ் அறிமுகம்!!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளதைப் பற்றி...

ஷுப்மன் கில் - ஹஷ்மத்துல்லா ஷாஹிதி - படம்: எக்ஸ்.

Published On :

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒருயொரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், தரம்சலாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தொடரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி லக்னௌவின் எகானா கிரிக்கெட் திடலில் இன்று (ஜூன் 17) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸை வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

இந்திய அணியில் இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் நிதீஷ்குமார் விலகியுள்ளார். பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக புதுமுக வீரர் பிரின்ஸ் யாதவ் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியில் உடல்நலக்குறைவால் முகமது நபி விலகியுள்ளார். காயம் காரணமாக அஸ்மத்துல்லா உமர்சாய் விளையாடவில்லை.

இந்திய அணி விவரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.

ஆப்கானிஸ்தான் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரான், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), தர்வீஷ் ரசூலி, ரஷீத் கான், நங்கேயாலியா கரோட்டி, ஏ.எம்.கசன்ஃபர், முகமது சலீம் சஃபி, பிலால் சமி.

Afghanistan win toss and opt to bowl, Prince Yadav makes his India debut

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.