மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிட்னி டெஸ்ட்டில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடிய கவாஜா! ஏன்?

சிட்னி டெஸ்ட்டில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினார் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா.

News image
ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் உஸ்மான் கவாஜா
Updated On :3 ஜனவரி 2025, 10:57 am

DIN

சிட்னி டெஸ்ட்டில் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா கறுப்பு பட்டை அணிந்து விளையாடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்- கவாஸ்கர் தொடரின் 5-வது மற்றும் கடைசிப் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 40 ரன்கள் விளாசினார்.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி விக்கெட்டாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 2 ரன்களில் ஜஸ்பிரித் பும்ராவிடம் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். பார்டர்- கவாஸ்கர் தொடரில் இதுவரை 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள உஸ்மான் கவாஜா 143 ரன்கள் எடுத்துள்ளார்.

போட்டியின் போது உஸ்மான் கவாஜா மட்டும் மற்ற ஆஸ்திரேலிய வீரர்களைத் தவிர்த்து தனது இடது கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினார். ஒருவரின் இறப்பு அல்லது துக்க நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

கறுப்புப் பட்டை அணிந்தது குறித்து உஸ்மான் கவாஜா விளக்கமளித்துள்ளார்.

அதில், கவாஜாவும், தென்னாப்பிரிக்க வீரரும், கவாஜாவின் நண்பருமான ஆஸ்வெல் பிரின்ஸும் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் லாங்ஷைர் அணிக்காக 2014 ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகின்றனர். அப்போது இருவரும் நட்பாக பழகிவந்தனர். அவரின் மனைவி மெலிசாவும் கவாஜாவுடன் நட்பாக பழகிவந்துள்ளார்.

பிரின்ஸின் மனைவி மெலிசா பிரின்ஸ்(40) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு நடந்தப் போட்டியில் “அனைத்து உயிர்களும் சமம்” என தனது காலணியில் பதிவிட்டு, கையில் கறுப்பு பட்டையுடன் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் கவாஜா.

சிட்னியில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியும் பிங்க் டெஸ்ட்டாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த டெஸ்ட் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டி அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.