மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பும்ராவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? நாளை விளையாடுவாரா?

ஜஸ்பிரீத் பும்ராவின் காயம் குறித்து இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார்.

News image
ஜஸ்பிரீத் பும்ரா- படம்: ஏபி
Updated On :4 ஜனவரி 2025, 9:15 am

DIN

இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ராவின் காயம் குறித்து மருத்துவக்குழு தொடர் கண்காணிப்பில் இருப்பதாக இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியின் 2ஆம் நாள் மதிய உணவுக்குப் பிறகு பும்ரா ஆடுகளத்தில் இல்லை.

பும்ரா 3 மணி நேரம், 20 நிமிடம் களத்தில் இல்லாமல் இருந்தார். அவருக்குப் பதிலாக விராட் கோலி இந்திய அணியை வழிநடத்தினார்.

இதற்கு முன்பாக ஜஸ்பிரீத் பும்ராவுக்கு 2022 - 2023ஆம் ஆண்டுகளில் முதுகு பகுதிகளில் ஏற்பட்ட பிரச்னைகளால் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

31 வயதாகும் பும்ரா மொத்தமாக இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி. மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக பும்ரா சாதனை படைத்துள்ளார்.

சிட்னி டெஸ்ட்டில் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஸ்கேன் எடுக்கச் சென்ற பும்ரா மீண்டும் ஓய்வறைக்கு திரும்பிய காட்சிகளைப் பகிர்ந்து இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் பும்ராவின் உடல்நிலை குறித்து பிரசித் கிருஷ்ணா கூறியதாவது:

பும்ராவுக்கு முதுகில் தசைப்பிடிப்பு. அதற்காக ஸ்கேன் செய்ய சென்றார். மருத்துவக்குழு அவரை கண்காணித்து வருகிறது. அவர்கள் அனுமதி கொடுத்தால் மீண்டும் விளையாடுவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.