மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர் அறிமுகம்!

டென்னிஸ் பந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

News image

டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர் அறிமுகம்

படம்: பிடிஐ

Updated On :7 ஜனவரி 2025, 2:55 pm

DIN

டென்னிஸ் பந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்குபெறும் டி10 டென்னிஸ் கிரிக்கெட் தொடரின் அறிமுக விழா துபையில் நடைபெற்றது.

இந்தப் போட்டிகள் மே 26ஆம் தேதி முதல் ஜுன் 5ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவிருக்கின்றன.

டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர் லட்சக்கணக்கான பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 அணிகள்: மும்பை மாவேரிக்ஸ், தில்லி டைனமிக்ஸ், பெங்களூரூ பிளாஸ்டர்ஸ், கொல்கத்தா கிங்ஸ், சண்டிகர் சாம்பியன்ஸ், ஹைதராபாத் ஹண்டர்ஸ், அகமதாபாத் அவேஞ்சர்ஸ், சென்னை சேலஞ்சர்ஸ்.

இதில் 31 லீக் போட்டிகள், 4 பிளே- ஆஃப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

டிபிசிபிஎல் (டென்னிஸ் பந்து கிரிக்கெட் பிரிமீயர் லீக்) இந்தப் போட்டிகளை இந்தியாவின் 50 நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளன. நாட்டின் அனைத்து மக்களும் பிரதிநிதித்துவப்படுத்த வடக்கு, தெற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளில் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்தத் தொடருக்கான ஏலம் வரும் மே.5,6ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கின்றன. இந்திய அளவில் இதற்கான வீரர்களை 8 அணிகளும் தேர்வு செய்துகொள்ளலாம்.

டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். தெருவில் விளையாடும் விளையாட்டை தொழில்முறையாக மாற்றும் நோக்கத்துடன் இது தொடங்கப்படுவதாக டிபிசிபிஎல் தெரிவித்துள்ளது.

இந்தத் தொடரின் அறிமுக விழாவினை முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த டிபிசிபிஎல்-க்கு விளம்பர தூதராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.