கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ஓய்வை அறிவித்தார் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன்!

வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

News image

வருண் ஆரோன்

Updated On :10 ஜனவரி 2025, 11:05 am

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

விஜய் ஹசாரே தொடரில் விளையாடிவந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி பந்துவீச்சாளர் வருண் ஆரோன், அவர் விளையாடிய ஜார்க்கண்ட் அணி நாக் அவுட் சுற்றில் தோல்வி அடைந்தது. இந்த நிலை, தான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35 வயதான வருண் ஆரோன் 2011 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளாக விளையாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்தாண்டு ஓய்வு பெற்ற நிலையில் தற்போது முழுமையாக அனைத்துவிதமான போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதை அறிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இவர் 9 டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கெட்டுகளும், 11 ஒருநாள் போட்டிகளில் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மேலும், முதல்தரப் போட்டிகளில் 66 போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.