ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; மருத்துவர்கள் கூறுவதென்ன?

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சைம் ஆயூப் அடுத்த 6 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

News image

படம் | AP

Updated On :10 ஜனவரி 2025, 10:24 am

DIN

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சைம் ஆயூப் அடுத்த 6 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஃபீல்டிங்கின்போது, பந்தை தடுக்க முயன்ற சைம் ஆயூபுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக பெவிலியன் திரும்பிய அவர் மீண்டும் ஃபீல்டிங்குக்கு வரவில்லை.

மருத்துவர் அறிவுரை

பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சைம் ஆயூபுக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் நிறைவடைந்தவுடன் சைம் ஆயூப் மருத்துவ பரிசோதனைக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எலும்பு முறிவு தொடர்பான சிறப்பு மருத்துவரான லக்கி ஜெயசலீன், சைம் ஆயூபை சோதித்தார்.

சைம் ஆயூப் காயம் குறித்து மருத்துவர் கூறியதாவது: சைம் ஆயூப் குறைந்தது 6 வாரத்திற்காவது ஓய்வில் இருக்க வேண்டும். அவர் உடனடியாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என நினைக்கக் கூடாது. உடனடியாக கிரிக்கெட் விளையாடினால் அவரது கணுக்கால் காயம் அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முதற்கட்ட அணியில் சைம் ஆயூப் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது. அதன் பின், அவரது உடல் நிலையைப் பொறுத்து பாகிஸ்தானின் பிரதான அணியில் சேர்க்கப்படுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயத்திலிருந்து குணமடையும் வரை, டெஸ்ட் போட்டிகளில் சைம் ஆயூபுக்குப் பதிலாக இமாம் உல் ஹக்கும், ஒருநாள் போட்டிகளில் ஃபகர் ஸமானும் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.