ஒருநாள் போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை!

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா (கோப்புப் படம்)
ஸ்மிருதி மந்தனா (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

ஸ்மிருதி மந்தனா சாதனை

இந்தப் போட்டியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். அவர் இந்த சாதனையை 95 போட்டிகளில் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், ஒருநாள் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த 3-வது வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 12) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.