உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image

படம் | பிசிசிஐ

Updated On :10 ஜனவரி 2025, 5:35 pm IST

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதலில் விளையாடியது.

அயர்லாந்து - 238/7

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 92 ரன்கள் எடுத்து 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 15 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, லீ பால் 59 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிட்டாஸ் சாது, சயலி சத்காரே மற்றும் தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்டுனைக் கைப்பற்றினர்.

இந்தியா வெற்றி

239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் 20 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து, பிரதீகா ராவல் மற்றும் தேஜல் ஹசப்னிஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. பிரதீகா ராவல் 96 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். தேஜல் 46 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில், இந்திய அணி 34.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.