40 வயதிலும் மிரட்டும் டு பிளெஸ்ஸி..! ஃபிட்னஸ், பேட்டிங்கின் ரகசியம் என்ன?

ஜேஎஸ்கே அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெஸ்ஸி 41 வயதை நெருங்கினாலும் ஃபிட்டாக இருக்கிறார்.
ஃபாப் டு பிளெஸ்ஸி
ஃபாப் டு பிளெஸ்ஸிபடங்கள்: இன்ஸ்டா / ஃபாப் டு பிளெஸ்ஸி.
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரும் ஜேஎஸ்கே (ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்) அணியின் கேப்டனுமான ஃபாப் டு பிளெஸ்ஸி 41 வயதை நெருங்கினாலும் ஃபிட்டாக இருக்கிறார். பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார்.

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக டு பிளெஸ்ஸி விளையாடுகிறார். சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 3 வருடமாக டி20 கிரிகெட்டில் 1,000க்கும் அதிகமான ரன்களை குவித்து வருகிறார்.

127 டி20 போட்டிகளில் விளையாடி 4,105 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 36.31ஆக இருக்கிறது. இதில் 4 சதங்கள், 32 அரைசதங்கள் அடங்கும். கடந்த 3 ஆண்டுகளில் ஸ்டிரைக் ரேட் 151ஆக இருக்கிறது.

உடல்நலத்தில் அதீத அக்கறை காட்டும் டு பிளெஸ்ஸி கூறியதாவது:

ஃபிட்னஸின் ரகசியம்

நான் எனது உடலை நன்கு புரிந்து கொள்கிறேன். பொதுவாகவே நாம் உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென்றால் அதிகமாக செயல்பட வேண்டுமென்ற தவறான கருத்து நிலவி வருகிறது. நான் அப்படியாக நினைக்கவில்லை.

நான் தொடர்சியாக உடற்பயிற்சி செய்கிறேனே தவிர அதிகமாக செய்வதில்லை. இது உங்களது நேரத்தை சரியாக பயன்படுத்துவதைப் பொறுத்தது.

நீங்கள் இளமையாக இருக்கும்போது நேரடியாக சென்று எதையும் செய்யலாம். நீங்கள் எதையும் வார்ம்-அப் செய்ய வேண்டியதில்லை. எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை.

தற்போது, ஐஸ் பாத், ஊட்டச்சத்து அதிக அளவு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

கடந்தாண்டு மட்டும் 1,502 ரன்கள் குவித்துள்ளார். 155.80 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார்.

இளைஞர்களுடன் போட்டியிட ஃபிட்னஸ் தேவை

பின்தசை தொடை நார்கள் மிகவும் முக்கியமானது. நீங்கள் வித்தியாசமாக பயிற்சி செய்யும்போது அவை மிருகமாக மாறும். அடுத்து தூக்கம் மிகவும் முக்கியம். நான் இளமையாக இருக்கும்போது அதைச் செய்யவில்லை. அப்போது முயற்சித்தபோது அது சரியாகவும் வேலை செய்யவில்லை.

நீங்கள் பரிணமிக்க வேண்டும். ஃபிட்டாக இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது. கடந்த 3 வருடமாக பேட்டிங்கில் முன்னேறி இருக்கிறேன். பயிற்சியிலும் அதேதான். அது நாம் பழக்கப்பட்ட மாதிரி இல்லை.

எனது ஃபிட்னஸ் சிறந்த தடகள வீரருடனும் என்னைவிட இளவயது நபர்களுடனும் போட்டியிட உதவுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com