அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
- படம் | பிசிசிஐ
Updated On :12 ஜனவரி 2025, 1:18 pm

DIN

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

சதம் விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரதீகா ராவல் 61 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதனையடுத்து, ஹர்லீன் தியோல் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக விளையாடியது போன்று இந்த இணையும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஹர்லீன் தியோல் அரைசதம் கடந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் விளாசி அசத்தினார். ஹர்லீன் தியோல் 84 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 91 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 370 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் ஓர்லா பிரண்டர்கேஸ்ட் மற்றும் அர்லீன் கெல்லி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜியார்ஜினா டெம்ப்ஸி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

தொடரை கைப்பற்றிய இந்தியா

371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணி, 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 116 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் அதிகபட்சமாக கோல்ட்டர் ரெய்லி 80 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சாரா ஃபோர்ப்ஸ் 38 ரன்களும், லாரா டெலானி 37 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், டிட்டாஸ் சாது மற்றும் சயாலி சத்காரே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.