அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்தா? சஞ்சு சாம்சனா? ஹர்பஜன் சிங் பதில்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் இடம்பெற வேண்டுமென்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

News image
ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன்
Updated On :12 ஜனவரி 2025, 4:26 pm

DIN

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் இடம்பெற வேண்டுமென்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் சாம்பியன்ஸ் டிராபிக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. இந்திய அணியும் விரைவில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் இடம்பெற வேண்டும் என்பது கவனம் பெற்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவானது. அந்த காலக் கட்டத்தில் இந்திய அணி விக்கெட் கீப்பர் இடத்துக்கு பல்வேறு வீரர்களை முயற்சி செய்தது. ஆனால், ரிஷப் பந்த் அளவுக்கு மற்ற வீரர்கள் பிசிசிஐ-ன் நம்பிக்கையைப் பெறவில்லை.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் நன்றாகவும் கீப்பிங் செய்தார். தொடக்க ஆட்டக்காரராகவும் அதிரடியாக விளையாடினார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் அதிரடியாக சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் சஞ்சு சாம்சன். அதுமட்டுமல்லாது, ஓராண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

ரிஷப் பந்த்தா? சஞ்சு சாம்சனா?

காயத்திலிருந்து குணமடைந்து ரிஷப் பந்த் இந்திய அணிக்காக நன்றாக விளையாடி வருகிறார். மறுபுறம், கடந்த ஆண்டில் மட்டும் சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் விளாசி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தன்னை தவிர்க்க முடியாத போட்டியாளராக மாற்றிக் கொண்டுள்ள சஞ்சு சாம்சன். இவர்களில் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நீண்ட தொடரில் ரிஷப் பந்த் விளையாடி முடித்துள்ளதால், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என உணர்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஹர்பஜன் சிங் (கோப்புப் படம்)

ஹர்பஜன் சிங் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் அல்லது ரிஷப் பந்த் இவர்கள் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என நினைக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற வேண்டும் எனக் கூறுவேன். ஏனென்றால், அவர் தென்னாப்பிரிக்காவில் கடைசியாக விளையாடியிருந்தார். அவர் மிகவும் நன்றாக விளையாடினார். ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நன்றாக விளையாடினார். ஆனால், அது மிகவும் நீண்ட தொடர். அதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரிஷப் பந்த்துக்கு ஓய்வளிப்பது பெரிய விஷயமாக இருக்காது என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.