இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது.

News image
தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கருடன் ரோஹித் சர்மா- கோப்புப் படம்
Updated On :18 ஜனவரி 2025, 3:13 am

DIN

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசமும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இவற்றில் இந்தியா, பாகிஸ்தான்தவிர்த்து, மற்ற நாடுகளின் அணிகளை அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஏற்கெனவே அறிவித்து விட்டன.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணி குறித்த அறிவிப்பை, இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர், இன்று நண்பகலில் அறிவிப்பார் என்று எதிர்க்கப்படுகிறது.

இந்திய அணியின் மிக முக்கியமான பந்துவீச்சாளரான ஜஸ்ரித் பும்ரா தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா என்று கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், இடது கை வீரர் என்பதால் அவரும் அணியில் இருந்தால், கூடுதல் பலமாக அமையும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்பது இன்று நடக்கவிருக்கும் தேர்வுக்குழு கூட்டம் முடிந்தவுடன் தெரியவரும்.

ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்திய அணிக்கான போட்டிகள் தவிர்த்து, மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.