மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை தக்கவைத்த ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அபார வெற்றி பெற்றது.

News image

வெற்றி மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்

படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :20 ஜனவரி 2025, 12:11 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 20) சிட்னியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் விளையாடியது.

பெத் மூனி அதிரடி

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக பெத் மூனி மற்றும் ஜியார்ஜியா இருவரும் களமிறங்கினர். இந்த இணை ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், ஜியார்ஜியா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், பெத் மூனியுடன் ஜோடி சேர்ந்த ஃபோப் லிட்ச்ஃபீல்டு சிறிது நேரம் களத்தில் நீடித்தார். அவர் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 51 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.

பெத் மூனியுடன் இணைந்து விளையாடிய கேப்டன் தஹிலா மெக்ராத் அதிரடியாக 9 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் லாரென் பெல், சோஃபி எக்கல்ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஃப்ரேயா கெம்ப் மற்றும் சார்லி டீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா வெற்றி

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீராங்கனைகள் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, சோஃபியா டங்க்லி மற்றும் நாட் ஷிவர் பிரண்ட் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. இருப்பினும், நாட் ஷிவர் பிரண்ட் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சோஃபியா டங்க்லி 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 16 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜியார்ஜியா வேர்ஹம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அலானா கிங் 2 விக்கெட்டுகளையும், மேகன் சூட், கிம் கார்த், அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் தஹிலா மெக்ராத் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன், ஆஷஸ் தொடரையும் தக்கவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.