3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

மகளிர் உலகக் கோப்பை: நியூசி.யை வீழ்த்தி நைஜீரியா வரலாற்று வெற்றி!

19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி நைஜீரியா வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நைஜீரிய அணி வீராங்கனைகள் - படம் | ஐசிசி

Published On :20 ஜனவரி 2025, 6:20 pm IST

19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி நைஜீரியா வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் அண்மையில் மலேசியாவில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் நைஜீரியா அணிகள் மோதின.

மழை காரணமாக போட்டி 13 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நைஜீரியா அணி நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லில்லியன் உடே 19 ரன்களும், கேப்டன் லக்கி பைட்டி 18 ரன்களும் எடுத்தனர்.

66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சிறப்பாக பந்துவீசிய லில்லியன் உடே நைஜீரிய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். அவர் கடைசி ஓவரில் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

வரலாற்று வெற்றி

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகளுக்கு பெயர்பெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே போன்று அங்கு கிரிக்கெட்டுக்கு அதிக அளவிலான வரவேற்பு கிடையாது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்குத் தேர்வான முதல் மேற்கு ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையுடன், தற்போது நியூசிலாந்தை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது நைஜீரியா.

முதல் முறையாக ஐசிசி தொடரில் விளையாடும் நைஜீரியா, ஐசிசியின் முழு உறுப்பினரான நியூசிலாந்து அணியை வீழ்த்தியது அனைவரது புருவங்களையும் உயரச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.