
உலகக் கோப்பைக்கு முன்பு சோதனை முயற்சியில் ஈடுபட அதிக நேரமில்லை: ஷுப்மன் கில்
ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக சோதனை முயற்சியில் ஈடுபட அதிக நேரமில்லை என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
பிரசித் கிருஷ்ணா - ஷுப்மன் கில்.
ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக சோதனை முயற்சியில் ஈடுபட அதிக நேரமில்லை என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (அக்டோபர் 3) சண்டீகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்த நிலையில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக சோதனை முயற்சியில் ஈடுபட அதிக நேரமில்லை என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக அணியில் சோதனை முயற்சி மேற்கொள்ள அதிக நேரமில்லை என நினைக்கிறேன். உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள் முழுமையாக இடம்பெறும் இந்திய அணியுடன் அடுத்த தொடரிலிருந்து களமிறங்குவோம். உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ள காம்பினேஷனுடன் நாங்கள் களமிறங்கி விளையாட வேண்டும்.
துரதிருஷ்டவசமாக அணியில் உள்ள வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணி ஜப்பான் சென்றடைந்ததால், எங்களால் நினைத்த பந்துவீச்சு தெரிவுகளுடன் விளையாட முடியவில்லை. பிரதான வீரர்கள் அணியில் இல்லாதது மற்ற வீரர்களுக்கு கிடைத்திருக்கும் சிறப்பான வாய்ப்பாகும். இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக் கொண்டு அவர்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் போன்ற வீரர்கள் ஜப்பான் சென்றடைந்ததால், அவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர்களில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian team captain Shubman Gill has stated that there is not much time to experiment ahead of the ODI World Cup tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







